அரசாங்க வீட்டுத்தட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் திட்டத்திற்காக தெரிவு செய்யப்படும் நபர் கட்டாயம் தான் வீடுத் திட்டத்திற்காக கொள்வனவு செய்த காணியில் கொட்டில் அமைக்க வேண்டி தேவையில்லை என கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தின் மூலம் உண்மை அம்பலமாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் அரச வீட்டுத்திட்டத்தில் தெரிவுசெய்யப்படும் பயனாளிகள் கட்டாயம் தமது காணியில் கொட்டில் அமைத்து வசித்தால் மட்டுமே அரச வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள் என அதிகாரிகளால் பல இடங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு எழுதப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தின் பயனாக பல்வேறு விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வழங்கப்பட்ட திட்டங்களுக்கு பயனாளிகள் வங்கியில் கட்டாயம் முன்பணம் இட வேண்டும் என்பது அரச சுற்றுநிறுபமா?என்ற கேள்விக்கு அவ்வாறு இல்லை என பதில் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பயனாளிகள் தெரிவில் திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் கட்டாயம் தமது திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட காணியில் கொட்டில் அமைத்து வாசிக்க வேண்டு என்பது அரச சுற்று நிருபத்தில் குறிப்பிடப்படவில்லை என பிரதேச செயலகம் பதில் வழங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த காலங்களிலும் சரி தற்போதும் அரச வீட்டுத் திட்டங்களில் இணைத்துக் கொள்ளப்படும் பயனாளிகளுக்கு அதிகாரிகள் சுற்றுநிருபம் அல்லாத சில முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
Post a Comment