யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு - Yarl Voice யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு - Yarl Voice

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு
யாழ்ப்பாண நகரின் மத்தியில் இன்றைய தினம் கொரோனா  விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோவின் வழிகாட்டுதலில்்

 யாழ் பொலீஸ் நிலையபொலீசார் யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் யாழ்  நகரப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து நிலையம் முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் ஏனைய இடங்களில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின்போது முகக்கவசம் அணியாதோர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தோடு பொது போக்குவரத்து மற்றும் வெளி மாவட்ட பேருந்து சேவையில் ஈடுபடுவோருக்கும் தற்கால சூழலில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பூரண விளக்கமளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post