நல்லூர் விடுதியில் விபசாரம் 2 பெண்கள் 6 பேர் கைது! - Yarl Voice நல்லூர் விடுதியில் விபசாரம் 2 பெண்கள் 6 பேர் கைது! - Yarl Voice

நல்லூர் விடுதியில் விபசாரம் 2 பெண்கள் 6 பேர் கைது!யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் விபசாரம் நடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து விடுதி முற்றுகையிடப்பட்டத்தில் இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இளம் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post