வடக்கில் இதுவரையில் 2392 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice வடக்கில் இதுவரையில் 2392 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

வடக்கில் இதுவரையில் 2392 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இம்மாதத்தில் முதலாம் திகதி முதல் இன்று வரை 41983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகளவாக 15 நாட்களில் கம்பஹாவில் 7,994 பேருக்கும் கொழும்பில் 7,352 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி யாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த 15 நாட்களில் 4827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் – 1330 வவுனியா – 361, முல்லைத்தீவு – 210, மன்னார் – 109 மற்றும் கிளிநொச்சியில்  387 பேர் அடங்கலாக கடந்த 15 நாட்களில் வடக்கு மாகாணத்தில்  2392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post