யாழ் மாவட்டத்தின் ஒரு கிராம பிரிவு உட்பட 4 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன - Yarl Voice யாழ் மாவட்டத்தின் ஒரு கிராம பிரிவு உட்பட 4 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன - Yarl Voice

யாழ் மாவட்டத்தின் ஒரு கிராம பிரிவு உட்பட 4 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டனஇன்று காலை 6.00 மணி முதல் கொவிட் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்ட 5 மாவட்டங்களில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவின் ஹுலங்கபொல்ல கிராமசேவகர் பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவின்  யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அபேயத்தன்ன வத்த பிரதான பிரதேசமும் க்ளே பிரிவும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பொலிஸ் பிரிவின் தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு பிரதேசங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவின் கரணவாய் பகுதியும் இரத்தினபுரி மாவட்டத்தின்  பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் நொரகல்லவத்த மேல் பிரிவு,பெல்மதுளை பொலிஸ் பிரிவின் பனாவென்ன கிராமசேவகர் பிரிவின் பெல்மதுளை தோட்டம் இல.1 பிரதேசம், இல.5 பிரதேசம்ஈ பெல்மதுளை பொலிஸ் பிரிவின் கபுஹென்தொட கிராமசேவகர் பிரிவின் பெல்மதுளை தோட்டம் இல.5 பிரதேசமும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. 

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த #கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ்  பிரிவின் 233ஆம் தோட்டம் மற்றும் மஹாவத்த வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post