திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு! - Yarl Voice திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு! - Yarl Voice

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு!திருச்சி மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இலங்கையின் கிழக்கு மாகாணாத்தை சேர்ந்த முகமது அலி என்பவரே உயிரிழந்துள்ளார்

 திருச்சிமத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உட்பட வெளிநாட்டினர் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்களில் தங்களை விடுதலை செய்யக்கோரி மன்னார் மீனவர்கள் 5 பேர் உட்பட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் கடந்த 9ம் தேதி முதல் 16 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்.

 அந்த வழக்கிலும் தண்டணைக் காலம் முடிந்தும் சிறையில் அடைத்துள்ளனர். பிணை கிடைத்தாலும் வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

எனவே சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து கடந்த மாதம் 24ம் தேதி ஒரு நாள் போராட்டம் நடத்தினர்.

 ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும் விடுதலை செய்யவதற்காக நடவடிக்கை எடுக்காததால் கடந்த 9ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

போராட்டத்திலும் இலங்கை மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த  முகமது அலியும் பங்கேற்றார். கடந்த 19ம் தேதி உடல் நலக்குறைவால் திருச்சி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது அலி (52) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கை கிழக்கு மாகாணம் மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த, முகமது அலி. மார்க்சிய சிந்தனையாளர், எழுத்தாளர். பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இலக்கிய ஆர்வம் உள்ளவர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிந்தும்  4 மாதங்களாக விடுவிக்கப்படாமல் இருந்ததாக சிறப்பு முகாம்வாசிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post