யாழில் அதிகரிக்கும் குழந்தைத் தொற்றாளர்கள் - 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு தொற்று - Yarl Voice யாழில் அதிகரிக்கும் குழந்தைத் தொற்றாளர்கள் - 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு தொற்று - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் குழந்தைத் தொற்றாளர்கள் - 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு தொற்று
யாழ்ப்பாணத்தில் 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்கள் நேற்று மட்டும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விடயம் வெளியானது.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் பிறந்து 49 நாட்களே யான சிசுவும், 12 வயது சிறுமியும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோன்று, மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையிலும் 6 மாத பெண் குழந்தையும், 3 வயது பெண் குழந்தையும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சங்கானையில் 15 வயது சிறுவ னும், காரைநகரில் 15 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 14 வயது சிறுமியும், சண்டிலிப்பாயில் 17 வயது சிறுவனுமாக நேற்று மட்டும் 9  குழந்தைகள், சிறுவர்கள்  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். 

இதேவேளை, அண்மை நாட்களாக குழந்தைகள், சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post