ஆட்சி செய்ய முடியாவிட்டால் வெளியேறுங்கள் - சஜித் - Yarl Voice ஆட்சி செய்ய முடியாவிட்டால் வெளியேறுங்கள் - சஜித் - Yarl Voice

ஆட்சி செய்ய முடியாவிட்டால் வெளியேறுங்கள் - சஜித்பொதுமக்களிற்கு நிவாரணம் வழங்கமுடியாவிட்டால் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிரான பேரணியில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை மிகமோசமாக மக்களை தாக்கியுள்ளது, அவர்களை கடுமையான நெருக்கடிகளிற்குள் தள்ளியுள்ளது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத –நெருக்கடியில் உள்ள மக்களிற்கு நிவாரணங்களை வழங்கமுடியா அரசாங்கம் பதவிவிலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களால் ஆட்சிசெய்ய முடியாவிட்டால்  வெளியேறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி மாற்றீடை வழங்க தயாராகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களிப்பவர்களை அடிப்படையாக வைத்து  மக்களின் நலனில் அக்கறை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிக்கமுடியும் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரத்பொன்சேகா முடக்கல் நிலையை  பயன்படுத்தி மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு எதிர்கட்சி அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post