ஊர்காவற்றுறைப் பகுதியில் 5000 கொடுப்பனவு எப்பபோது? -அங்கலாய்க்கும் மக்கள்- - Yarl Voice ஊர்காவற்றுறைப் பகுதியில் 5000 கொடுப்பனவு எப்பபோது? -அங்கலாய்க்கும் மக்கள்- - Yarl Voice

ஊர்காவற்றுறைப் பகுதியில் 5000 கொடுப்பனவு எப்பபோது? -அங்கலாய்க்கும் மக்கள்-ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அரசாங்கத்தில் கொரோனா நெருக்கடியை முன்னிட்டு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு இன்னமும் முழுமையாக வழங்கப்படாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு பிற பிரதேச செயலகங்களில் வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் ஊர்காவற்றுறை பிரதேசத்திலும் வழங்கப்படுகின்றது.
இருப்பினும் சகலருக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை.

ஊர்காவற்றுறை பிரதேசத்தை பொறுத்தவரையில் நாளாந்தம் கூலிவேலை மற்றும் சுயதொழிலாளர்களே அதிகமாக வாழும் நிலையில் கொரோனா பயணத்தடைக்காலத்தில் உணவுக் வழியின்றி கஸ்டத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில் அரசின் உதவியும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post