விடுதலைப்புலிகள் சுதந்திரத்திற்காக போராடிய அமைப்பு - அமெரிக்கா - Yarl Voice விடுதலைப்புலிகள் சுதந்திரத்திற்காக போராடிய அமைப்பு - அமெரிக்கா - Yarl Voice

விடுதலைப்புலிகள் சுதந்திரத்திற்காக போராடிய அமைப்பு - அமெரிக்காவிடுதலைப்புலிகளை சுதந்திரத்திற்காக ஆயுதமேந்திய அமைப்பு என அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் குறிப்பிடுகின்றது – அதனைக் கைவிட இலங்கை கோரிக்கை

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெப்ராரொஸ் கொண்டுவந்துள்ள தீர்மானத்தைக் கைவிட வேண்டும் என இலங்கை கேட்டுக் கொண்டுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

கடிதமொன்றில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான துல்லியமற்ற பக்கச்சார்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய தீர்மானத்தை இலங்கை எதிர்ப்பதாகவும் தீர்மானத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை விரிவாக ஆராய்ந்து இலங்கை தூதுவர் தனது கடிதத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

1997 இல் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட 2008 இல் எவ்பிஐயின் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரமான விடுதலைப்புலிகள் அமைப்பை தீர்மானம் ஆயுதமேந்திய சுதந்திர அமைப்பு எனக் குறிப்பிடுவது தீர்மானத்தின் நோக்கத்தைப் புலப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தீர்மானம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப் பதுடன் இலங்கை அரசாங்கத்தின் இயல்பையே கேள்விக்குள்ளாக்குகின்றது –தமிழர்களின் தாயக பூமி குறித்து தெரிவிக்கின்றது எனவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post