அரசின் பொறுப்பற்ற செயலால் வடக்கில் கொரோனா தாண்டவம்! டக்ளஸ்-அங்கஜன்- நாமல் கூட்டு அரசியல் இலாபம் தேடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice அரசின் பொறுப்பற்ற செயலால் வடக்கில் கொரோனா தாண்டவம்! டக்ளஸ்-அங்கஜன்- நாமல் கூட்டு அரசியல் இலாபம் தேடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

அரசின் பொறுப்பற்ற செயலால் வடக்கில் கொரோனா தாண்டவம்! டக்ளஸ்-அங்கஜன்- நாமல் கூட்டு அரசியல் இலாபம் தேடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டுயானை பசிக்கு சோளப்பொரி போல சிறிய அளவிலான கொரோனாத்தடுப்பு மருந்துகளை கொண்டு வந்துவிட்டு பெருமளவான ஆட்களைத் திரட்டி கொரோனாவை பரப்பும் வகையில்  செயற்பாடு காணப்படுகின்றதென 
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே இதனைத் தெரிவித்தார்.

கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே உள்ளது .வடமாகாணத்தில் ஏற்கனவே தடுப்பூசியை வழங்கியிருந்தால் வடமாகாணம் கொரோனாவால் இந்தளவு பாரதூரமான விளைவுகளை சந்தித்திருக்காது. அரசாங்கத்தின் பொறுப்பற்றதனத்தால் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது 

யானை பசிக்கு சோளப்பொரி போல சிறிய அளவிலான கொரோனாத்தடுப்பு மருந்துகளை கொண்டு வந்துவிட்டு பெருமளவான ஆட்களைத் திரட்டி கொரோனாவை பரப்பும் வகையில்  செயற்பாடு காணப்படுகின்றது.

 மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாக அது அமையவில்லை .அரசியல் லாபம் தேடும் முயற்சியையே அங்கஜன் இராமநாதனும் டக்ளஸ் தேவானந்தாவும் நாமல் ராஜபக்ஷவும் சேர்ந்து செய்துள்ளனர் .அந்த தடுப்பூசியை சுகாதார பிரிவிடம் கையளித்திருந்தால் அவர்கள் அதனை சிறப்பாக செய்திருப்பார்கள். நிலைமைகள் மோசமாக சொல்லும்போது அதற்குள் அரசியல் லாபம் தேடும் முயற்சியே நடைபெற்றது 

தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தேசிய கல்வியற்கல்லூரி மாணவர்களின் சொத்து .

நெருக்கடியான நிலையில் மக்களுடைய நலனுக்காக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இருந்தாலும் கூட அதனை பொறுப்பாக கையாள வேண்டியது முக்கியமாகும். இதனை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவதற்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலை பதில்பணிப்பாளரை சந்தித்ததாக இதன்போது அவர் தெரிவித்தார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post