மருத்துவமனைக்கு செல்ல மக்கள் தயங்குவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன- மருத்துவர் தகவல் - Yarl Voice மருத்துவமனைக்கு செல்ல மக்கள் தயங்குவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன- மருத்துவர் தகவல் - Yarl Voice

மருத்துவமனைக்கு செல்ல மக்கள் தயங்குவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன- மருத்துவர் தகவல்
புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் முதியவர்கள் ஏனைய நோய்களிற்காக மருத்துவமனைக்கு செல்ல தயங்குகின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உட்பட அனைத்து நோய்களிற்காகவும் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் சிகிச்சைகளை பெறவேண்டும் என கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மருத்துவர் டில்கார சமரவீர தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு செல்ல  மக்கள் தயங்குவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலவசமருத்துவ சேவைகளை பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தொலைபேசி இலங்கங்கள் மூலம் அல்லது குடும்ப மருத்தவர்கள் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதன் மூலம்  கிசிச்சையை பெறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post