தந்தை பிறந்தநாள்… ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி போட்ட மகேஷ் பாபு! - Yarl Voice தந்தை பிறந்தநாள்… ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி போட்ட மகேஷ் பாபு! - Yarl Voice

தந்தை பிறந்தநாள்… ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி போட்ட மகேஷ் பாபு!
தனது தந்தை பிறந்தநாளையொட்டி சொந்த செலவில் ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி வழங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.

கொரோனாவை வெல்லும் பேராயுதமாக மருத்துவர்களால் தடுப்பூசி முன்வைக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்களிடம் தொடர்ந்து வரும் சூழலில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள். 

இந்நிலையில், தனது தந்தை பிறந்தநாளையொட்டி சொந்த செலவில் ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி வழங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.

இன்று நடிகர் மகேஷ் பாபுவின் அப்பாவும் நடிகருமான கிருஷ்ணாவின் 78 வது பிறந்தநாள். அதனைக் கொண்டாடும் விதமாக, மகேஷ் பாபு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார்.

அந்த கிராம மக்களும் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்னர். இதனை, பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ் பாபுவும் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, நடிகர் மகேஷ்பாபு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் கிராமங்களைத் தத்தெடுத்து புதுப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்க்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post