முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - அமைச்சரவை அனுமதி - Yarl Voice முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - அமைச்சரவை அனுமதி - Yarl Voice

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - அமைச்சரவை அனுமதிமுன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் 2500 ரூபாய்கள் மாதாந்த கொடுப்பனவு, இன்று முதல் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவாத்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தொடக்கம் தகுதி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்சமயம் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில், அதனை 2500 ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” என்ற எமது கொள்கைப் பிரகடனத்திற்கமைய,

முன்பள்ளி ஆசிரியர்கள் மனிதவள அபிவிருத்தியில்  முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
 
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர், அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக பிரத்தியேக கவனம் செலுத்தப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post