யாழில் மேலும் ஒரு பகுதியை முடக்க நடவடிக்கை - Yarl Voice யாழில் மேலும் ஒரு பகுதியை முடக்க நடவடிக்கை - Yarl Voice

யாழில் மேலும் ஒரு பகுதியை முடக்க நடவடிக்கையாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு
சிபார்சு செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில்  தொற்றாளர்கள் இனங் காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில்  உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில்  அதிகளவில்  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுதன் 

காரணமாக இணுவில் கிராமத்தின்  ஒரு பகுதியினை   தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு  செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு  செயலணியின்  அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது 

குறித்த  இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியில்  பல தொற்றாளர்கள்   இனங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியினை முடக்குவதற்கு அனுமதி கோரி சுகாதாரப் பிரிவினரால்  விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post