யாழில் கொள்ளை இலாபத்தில் விற்க அதிகளவான மதுபானம் கொள்வனவு செய்த நான்கு பேர் வசமாக மாட்டினர் - Yarl Voice யாழில் கொள்ளை இலாபத்தில் விற்க அதிகளவான மதுபானம் கொள்வனவு செய்த நான்கு பேர் வசமாக மாட்டினர் - Yarl Voice

யாழில் கொள்ளை இலாபத்தில் விற்க அதிகளவான மதுபானம் கொள்வனவு செய்த நான்கு பேர் வசமாக மாட்டினர்சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது பெருமளவான மதுபானப் போத்தல்களுடன்  நால்வர் கைது செய்யப்பட்டனர்.

பயணத் தடை இன்று வியாழக்கிழமை நடைமுறையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி அதி கூடிய விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக கூறப்படும் நால்வர் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் 180 மில்லி லீற்றர் அளவுடைய 150 மதுபான போத்தல்களும், 750 மில்லி லீற்றர் அளவுடைய 3 மதுபான போத்தல்களும், 500 மில்லி லீற்றர் அளவுடைய 72 பியர் ரின்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post