அமெரிக்காவின் கடற்படை கப்பலால் சீனா கடும் சீற்றம் ! - Yarl Voice அமெரிக்காவின் கடற்படை கப்பலால் சீனா கடும் சீற்றம் ! - Yarl Voice

அமெரிக்காவின் கடற்படை கப்பலால் சீனா கடும் சீற்றம் !




தைவான் மற்றும் சீனா நாடுகளை பிரிக்கும் கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல் பிரசன்னமாகியிருப்பது  தனது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என்ற தொனியில் சீனா கடுமையாக கண்டித்துள்ளது. 

7 அடி நீளமான ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட அமெரிக்க கடற்படை கப்பல் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு வழமையான பயணத்தை மேற்கொண்டது 

தைவான்  நீரினை ஊடாக அமெரிக்க கடற்படை கப்பலின் பயணம் அமெரிக்காவின் திறந்த மற்றும் பரந்த வெளி இந்தோ பசுபிக் எல்லைக் கொள்கையை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது .

அமெரிக்காவின் இவ்வாறானா நடவடிக்கைகள் சர்வதேச ரீதியாக நாடுகளை குழப்பி பின்னர் பிரச்சனைகளை உண்டு பண்ணும் தந்திரோபாய செயல் என சீனா எச்சரித்துள்ளது. 

இருப்பினும் அமெரிக்க ராணுவ கப்பல் தைவானின் நீரிணையினுடாக வடக்கு நோக்கி சென்றதாகவும் இது சாதாரண செயல்பாடு எனவும் தைவான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post