இன்று இரவு முதல் மீண்டும் முடக்கம்: வார இறுதிவரை தொடரலாம்? - Yarl Voice இன்று இரவு முதல் மீண்டும் முடக்கம்: வார இறுதிவரை தொடரலாம்? - Yarl Voice

இன்று இரவு முதல் மீண்டும் முடக்கம்: வார இறுதிவரை தொடரலாம்?
நேற்று முன்தினம் காலையில் விலக்கிக் கொள்ளப்பட்ட பயணத்தடை  இன்று இரவு முதல் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளது.

 இன்று இரவு 10.00 மணி முதல் நாடுதழுவியதான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு இன்று இரவு 10.00 மணி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன்-25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியுடன் விலக்கி கொள்ளப்படும் .

ஆயினும் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் நாடு தழுவிய முடக்க நிலை வார இறுதி நாட்களிலும் நீடிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post