வரலாற்றை திரிப்பவர்களுக்கு ’மேதகு’ பதிலடி தரும் - நடிகர் சத்யராஜ்! - Yarl Voice வரலாற்றை திரிப்பவர்களுக்கு ’மேதகு’ பதிலடி தரும் - நடிகர் சத்யராஜ்! - Yarl Voice

வரலாற்றை திரிப்பவர்களுக்கு ’மேதகு’ பதிலடி தரும் - நடிகர் சத்யராஜ்!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு மேதகு என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இன்று நண்பகல் முதல் BS value வலை தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இது குறித்து நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து பேசினர்.

 வரலாற்றை திரித்துக் கூறும் வகையில் தற்போது சில வலைத்தொடர்கள் வெளி வந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேதகு திரைப்படம் அமையும் எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

கிட்டு எனும் புதுமுகப் படைப்பாளி, போதிய ஆராய்சித் தரவுகளின் அடிப்படையில் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, தமிழ் ஈழ திரைக்களம் என்ற பதாகையின் கீழ் ரியாஸ் தயாரித்துள்ளார். பிரவீன் இசையமைத்துள்ளார். 

கடந்த ஆண்டே படம் முடிவு பெற்ற இப்படம் கடந்த நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றால் தள்ளிப்போன இப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post