அரச, தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை மறைக்கின்றன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice அரச, தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை மறைக்கின்றன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice

அரச, தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை மறைக்கின்றன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்த விபரங்களை மறைக்கும் அரச, தனியார் நிறுவனங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச, தனியார் நிறுவனங்கள் சிலர் தங்களின் ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களிடமிருந்து மறைக்கின்றன என தகவல்கள் கிடைத்துள்ளன என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சில அரச தனியார் நிறுவனங்கள் பின்பற்றாததை நாங்கள் அவதானித்துள்ளோம் என அவர் தெரிவித் துள்ளார்.

நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனங்களிற்கே பாதிப்பு என  அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்காமல் நோயாளிகளை மறைப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம், அவர்கள் பிசிஆர், அன்டிஜென் சோதனைகளை முன்னெடுப் பதில்லை எனவும் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரச, தனியார் நிறுவனங்களுக்கு சேவையைப் பெறச்செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு இது தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post