மீதமுள்ள அரசியல் கைதிகளையும் படிப்படியாக விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் -சுரேன் ராகவன் - Yarl Voice மீதமுள்ள அரசியல் கைதிகளையும் படிப்படியாக விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் -சுரேன் ராகவன் - Yarl Voice

மீதமுள்ள அரசியல் கைதிகளையும் படிப்படியாக விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் -சுரேன் ராகவன்



நாடாளுமன்றத்திலே நேற்றுமுன்தினம் ஒரு தமிழ் தேசியத்தலைவர் என சொல்லிக்கொள்பவர் அரசாங்கத்தையும் என்னையும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு சவால்விடுத்தார். முடியுமானால் செய்துகாட்டுங்கள் என்றார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியிருக்கின்றோம்நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இன்று (2021.06.25) பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கைத் தமிழ் அரசியலில் நேற்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இப்போதாவது இது நடந்திருப்பதைக்குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அதேபோல தமிழ் அரசியலைப்பற்றி கரிசனையடையவர்கள் சந்தோஷமடைய வேண்டியதுமாயிருக்கின்றது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முழுடுமையாக 93 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒவ்வொரு பொசன் மற்றும் வெசாக் நாட்களில் இது நடைபெறும் விடயமாக இருந்தாலும் நேற்று நடந்த விடயத்திலிலுள்ள விசேட விடயம் என்னவென்றால்இ பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர். 

அரசியல் வரலாற்றில் அரசியல் நியமங்களின்படி கைதிகளை விடுவிப்பதானது இருதரப்பினருக்கு இடையே இடம்பெறுகின்றதாகும். அது போர்க் கைதிகள் அல்லது வேறு கைதிகளாகவும் இருக்கலாம். கைதிகளை விடுவிக்கின்ற முக்கிய கலாசாரத்தின் நோக்கம் என்பதுஇ விழுந்திருக்கின்ற அல்லது இல்லாமல் போயுள்ள உறவை வளர்த்தெடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியாகும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எடுத்த இம்முயற்சி நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விவாதிக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய வாழ்கையில் சிறையில் அனுபவித்த கண்ட கதைத்த தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வேதனையை உணர்ந்தவராக பிரேரணையை முன்வைத்தார். முதன்படி ஜனாதிபதிக்கும் நாமல் ராஜபக்ஷ அமைச்சருக்கும் நிதியமைச்சர் அலிசப்ரிக்கும் எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன். 

நீண்டகாலமாக சிறைகளில் பெற்றோர் பிள்ளைகளை இழந்து இருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மீண்டும் ஒரே கூரைக்குள் இரவு உணவை அருந்தியிருப்பார்கள். அதன் பின்னணியில் இன்னுமொரு விடயம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதம் துக்ககரமாகவே இருந்தது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்தாலும்கூட நான் ஆளுநராக இருந்த காலத்திலும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்ட முயற்சிகளின் பேரில் இந்த விடயம் இடம்பெற்றிருப்பதை தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் ஏற்கமறுக்கின்றனர். 

சில நேரங்களில் இப்படியான முக்கிய கேந்திர அரசியல் தீர்வுகளைக் காணும்போது அவர்களுடைய எதிர்கால அரசியல் வெறுமனே நின்றுவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கின்றதோ என்ற கேள்வி எழும்பியுள்ளது. அரசியல்கைதிகள் இன்னும்பலர் உள்ளனர். 106 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் நாங்கள் விடுதலை செய்ய வேண்டும். 

அதற்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். காணாமல் போனோரைப் பற்றியான தீர்மானங்கள் எடுக்கவேண்டும். 96 சதவீதமான தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எழுத்துமூலமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 03 வீதமான காணிகள் கொடுக்கப்படவுள்ளன. அல்லது அந்தக் காணிகளுக்குப்பதிலாக நஷ்டஈடுகள் அல்லது மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின்இ எனது தனிப்பட்ட நிலைப்பாடு. மெதுவாக இந்த விடயங்களை செய்யவேண்டும். 

குடிநீர்இ கமநீர்இ கொண்டுவருவதற்கான முயற்சியிலும் நான் ஈடுபட்டுள்ளேன். என்னை சார்ந்தவர்கள் அதனை அறிந்திருக்கின்றார்கள். எனது தனிப்பட்ட அரசியல் அல்லது குடும்பத்திற்காக இதனை செய்யவில்லை. நீதியான சமுதாயத்தில் தமிழ் மக்கள் ஜனநாயகமாக வாழ வேண்டும் சுதந்திரம் உரிமையுடன் மக்கள் வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் இதனை செய்துகொண்டிருக்கின்றேன். 

ஆனால் கூட்டாக எடுக்க வேண்டிய சில அரசியல்வாதிகள் இதன்மீது விசனம்கொண்டிருப்பதை நாங்கள் அறிந்து துக்கப்படுகின்றோம். அவர்களது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கீழ்மட்டத்திற்கு அவர்கள் வந்திருக்கின்றார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழ் ஊடகங்கள் இதுகுறித்து நடுநிலைக்கொண்டு தமிழ் அரசியலிலே சுதந்திரமான தமிழ் மக்கள் இருக்க வேண்டியதற்கான ஜனநாயக வழியிலே செம்மையான வழியில் இருக்க வேண்டும். 

இன்னும் இருக்கின்ற 103 பேருக்காக நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். சிலர் நேரடியாகவே பாரிய குற்றங்களைப் புரிந்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களைக்கூட ஏதோ பயங்கரவாத அரசியல் செய்தார்கள் என்ற காரணத்திற்காக இருக்கின்றார்கள். அவர்களைக்கூட நாங்கள் மீளாய்வு செய்து முடியுமான ஒவ்வொருவரையும் விடுதலை செய்யக்கூடிய முயற்சியில் இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடனும் திடநம்பிக்கையுடனும் தெரிவிக்கின்றேன். 
மற்றுமொன்றை நான் சொல்லவேண்டும். 

நாடாளுமன்றத்திலே நேற்றுமுன்தினம் ஒரு தமிழ் தேசியத்தலைவர் என சொல்லிக்கொள்பவர் அரசாங்கத்தையும் என்னையும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு சவால்விடுத்தார். முடியுமானால் செய்துகாட்டுங்கள் என்றார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியிருக்கின்றோம். பாடசாலை சென்ற ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியும் 5ஆம் தரத்தில்கூட சவால்விடுத்தபின் அதில் தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று. அதனை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. 

 

(கேள்வி-பதில்)
கேள்வி - மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில் - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால்இ ஜனநாயகமாக இந்த நாடு இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் சுபீட்சம் பெற்று அதற்காக தமிழ் மக்கள் பங்களிப்பு செய்து ஜனநாயக அரசியலில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்ற முக்கிய நோக்கமாகியிருக்கின்றது. ஆகையால் மீதமுள்ள அரசியல் கைதிகள் எனச் சொல்கின்ற அவர்கள்இ அரசியலை பயங்கரமாக வைத்திருந்தவர்களைத் தான் சொல்கின்றோம். அவர்கள் தெரிவுசெய்த பாதை இது. அவர்களைக்கூட மீளாய்வுசெய்து படிப்படியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post