ஆயுள்வேத மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை? -காரணம் என்ன என அவர்கள் கேள்வி- - Yarl Voice ஆயுள்வேத மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை? -காரணம் என்ன என அவர்கள் கேள்வி- - Yarl Voice

ஆயுள்வேத மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை? -காரணம் என்ன என அவர்கள் கேள்வி-
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆயுள்வேத மருத்துவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்படாமை குறித்து அவர்கள் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. தமக்கு தடுப்பூசி போடப்படாமைக்கான காரணம் என்ன என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பல ஆயுள்வேத மருத்துவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் தொடர்ந்தும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் இயங்கும் நிலையிலும் அவர்களுக்கான தடுப்பூசிகள் மறுக்கப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாணத்திற்கு என முதலாம் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளில் 300 வரையான ஊசிகள் தற்போதும் இருப்பில் உள்ளன. அவற்றை ஏற்றி முடிப்பதற்கான இறுதித் தினம் நாளையாகும். 

வடக்கு மாகாண சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் முயன்றால், இந்த ஊசிகளை ஆயுள்வேத மருத்துவர்களுக்கு ஏற்ற முடியும் எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post