ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை முதலிடம் பிடித்தது நியூசி -ஒருநாள் தொடரிலும் முதல் நிலை நீடிப்பு- - Yarl Voice ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை முதலிடம் பிடித்தது நியூசி -ஒருநாள் தொடரிலும் முதல் நிலை நீடிப்பு- - Yarl Voice

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை முதலிடம் பிடித்தது நியூசி -ஒருநாள் தொடரிலும் முதல் நிலை நீடிப்பு-இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை சமந்நிலையில் முடித்த நியூசிலாந்து அணி, 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து அணி 123 புள்ளிகளுடன் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி (121 புள்ளி) 2 ஆவது இடத்திலும் அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post