கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு கடைசி நேரத்தில் இரத்து - Yarl Voice கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு கடைசி நேரத்தில் இரத்து - Yarl Voice

கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு கடைசி நேரத்தில் இரத்துதமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாளை புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது.

இந்நிலையில், குறித்த சந்திப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ள நிபுணர் குழுவிற்கு அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தனது யோசனைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்தது.
அதன் பின்னர் அந்த குழுவை தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்தித்திருந்தது.

இந்த செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தும் நோக்கிலேயே நாளைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post