இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படவேண்டும் - இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் - Yarl Voice இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படவேண்டும் - இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் - Yarl Voice

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படவேண்டும் - இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை, பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட  எங்களின் பரஸ்பர பாதுகாப்பு  உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை கருத்தில்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின்  பேச்சாளர் அரின்டம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறை நகர திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு முன்னோக்கு அடிப்படையில் சமீபத்தைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகநகர கட்டமைப்பு குறித்து இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post