சீன விண் வெளிவீரர்களுடன் முதல் முறையாக விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது ! - Yarl Voice சீன விண் வெளிவீரர்களுடன் முதல் முறையாக விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது ! - Yarl Voice

சீன விண் வெளிவீரர்களுடன் முதல் முறையாக விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது !




மூன்று விண்வெளி வீரர்களை கொண்ட விண்கலம் ஒன்றை இன்று காலை  சீனா விண்ணில் ஏவியுள்ளது. இந்த விண்கலம் பூமிக்கு அருகிலுள்ள சுற்று வட்டபாதையில் இன்னமும் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்  ரியன்கே (Tianhe) விண்வெளி  நிலையத்தில் இணைத்துக்கொள்ளும.

ஷென்ஷோகு 12 அல்லது தெய்விக கலம் என அழைக்கப்படும் இந்த விண்கலம் பீஜிங் நேரப்படி காலை 9.22க்கு சீனாவின் தென்மேற்கு கான்சு மாகாணத்தில் உள்ள ஜிஉவாங் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

சீனாவின் மொத்த 11 விண்வெளி திட்டங்களில் "ஷென்ஷோகு 12 " மூன்றாவது திட்டமாகும். இதைவிடமேலும் நான்கு விண்கலங்கள் விண்வெளி வீரர்களை காவிச் செல்லவுள்ளது.  

56 வயதுடைய நீயே ஹேஷெங்,  54 வயதுடைய லியு போமிங்,  45 வயதுடைய டங் ஹங்போ ஆகியோர் நகரங்களில் இயக்கப்படும் பேருந்தின் அளவு கொண்ட விண்ணில் உள்ள Tianhe விண்வெளி நிலையத்தில் தங்கி உயிர் காப்பு கருவிகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பரிசீலிப்பார்கள் என அறிவிக்கப்படுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post