யாழ் போதனாவில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு - Yarl Voice யாழ் போதனாவில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு - Yarl Voice

யாழ் போதனாவில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்புசிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.  

 சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்திய சாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கோவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது.

பெருமளவானோர் தமக்கான கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post