யாழ் போதனா கிளினிக் நோயாளர்களுக்கு தபால் மூலமாக மருந்துகளை அனுப்ப நடவடிக்கை - Yarl Voice யாழ் போதனா கிளினிக் நோயாளர்களுக்கு தபால் மூலமாக மருந்துகளை அனுப்ப நடவடிக்கை - Yarl Voice

யாழ் போதனா கிளினிக் நோயாளர்களுக்கு தபால் மூலமாக மருந்துகளை அனுப்ப நடவடிக்கை



யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான  மருந்து வகைகள் நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர் , கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் ழூலமாக அனுப்பி வைக்கப்படும்

நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்
021 221 4249
021 222 2261
021 222 3348

0/Post a Comment/Comments

Previous Post Next Post