மனிதக்கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் முறை அறிமுகம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி - Yarl Voice மனிதக்கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் முறை அறிமுகம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி - Yarl Voice

மனிதக்கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் முறை அறிமுகம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி
முதல் முறையாக மனிதக்கழிவுகளை எந்திரம் மூலம் அகற்றும் முறை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில்,மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனது முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொய்யாத்தோப்பு பகுதியில் இந்த எந்திர செயல்பாட்டை துவக்கி வைத்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post