வவுனியாவில் நடைபெற்ற தியாகிகள் தினம் - Yarl Voice வவுனியாவில் நடைபெற்ற தியாகிகள் தினம் - Yarl Voice

வவுனியாவில் நடைபெற்ற தியாகிகள் தினம்ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 31வது தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் 19.06.2021 இன்றைய தினம் நடைபெற்றது.

இன்று மாலை 19.06.2021 மாலை 6.00 மணிக்கு(இலங்கை நேரம்) நடைபெறவுள்ள தியாகிகள் தின ZOOM கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) 31வது தியாகிகள் தினம் 19.06.2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (இலங்கை நேரம்) (Zoom Meeting மெய்நிகர் நிகழ்வு) தோழர்.அருந்தவராஜா தலைமையில் நடைபெற உள்ளது. சிறப்புப் பேச்சாளர்களாக தோழர்.T.S.S.மணி (தமிழ்நாடு), தோழர்.பாவல்சங்கர் (தமிழ்நாடு), வி.சிவலிங்கம் (இலண்டன்), S.L.M.ஹனீபா(மட்டக்களப்பு), தோழர்.சுரேஸ்பிரேமச்சந்திரன், தோழர்.சிவசக்திஆனந்தன், தோழர்.சர்மா, தோழர்.வளவன்(கனடா) திரு.சுந்தரம் சிறிதரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். கவிதா நிகழ்வொன்றை செல்வி.துவாரகா புண்ணியநாதன் நடாத்த உள்ளார். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post