பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தவேண்டாம்- எரிபொருள் விலை அதிகரிப்பு அறிவிப்பை மீள பெறுங்கள் - ஜேவிபி வேண்டுகோள் - Yarl Voice பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தவேண்டாம்- எரிபொருள் விலை அதிகரிப்பு அறிவிப்பை மீள பெறுங்கள் - ஜேவிபி வேண்டுகோள் - Yarl Voice

பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தவேண்டாம்- எரிபொருள் விலை அதிகரிப்பு அறிவிப்பை மீள பெறுங்கள் - ஜேவிபி வேண்டுகோள்




பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தாமல் எரிபொருள்களில் விலைகளை அதிகரிக்கும் அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெறவேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் நன்மைக்காக ஏன் எரிபொருள்விலையை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் நிதியை பயன் படுத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நிதியத்திற்கு என்ன நடந்தது என நாங்கள் கேட்கின்றோம்,என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி மக்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் நெருக்கடியில் இருக்கும்போது அத்தியாவசிய பொருட்களி;ன் விலைகள் பலமடங்காக அதிகரித்துள்ள போது அரசாங்கம் ஏன் அதனை பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெருந்தொற்றுகாலத்திலும் போக்குவரத்து கட்டு;ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் எரிபொருள் விலை அதிகரிப்பு நிலைமiயை மேலும் மோசமாக்கும் என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு அனைத்து துறைகளையும் பாதிக்கும்,போக்குவரத்து செலவு பேருந்து கட்டணத்தை அதிகரிக்கும் பொதுமக்களால் அதனை தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post