பிரிட்டிஸ் மகாராணிக்கு தங்கள் குழந்தையை வீடியோ மூலம் காண்பித்தனர் ஹரி தம்பதியினர் - Yarl Voice பிரிட்டிஸ் மகாராணிக்கு தங்கள் குழந்தையை வீடியோ மூலம் காண்பித்தனர் ஹரி தம்பதியினர் - Yarl Voice

பிரிட்டிஸ் மகாராணிக்கு தங்கள் குழந்தையை வீடியோ மூலம் காண்பித்தனர் ஹரி தம்பதியினர்இளவரசரி ஹரி தம்பதியினரிற்கு நான்காம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில்  தங்களின் குழந்தையை அவர்கள் வீடியோ மூலம் பிரிட்டிஸ் மகாராணிக்கு காண்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்காம் திகதி அமெரிக்காவில் பிறந்த லில்லிபெட் டயனா மவுட்பட்டன் வின்ட்சர்  மிக முக்கியமான நபரை சந்திக்கவேண்டியிருந்தது – அவர் யாரின் பெயரை சுவீகரித்துள்ளாரோ அவரை சந்திக்கவேண்டியிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் பிறந்த பிரிட்டிஸ் அரசவம்சத்தின் முதலாவது நபர் என்ற வரலாற்றுபெருமைக்குரியவராகியுள்ள லில்லிபெட் டயனா மவுட்பட்டன் வின்ட்சர்  வீடியோ மூலம் பிரிட்டிஸ் மகாராணியை சந்தித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரியும் மேகனும் தங்கள் குடும்பத்தின் புதியவரவை மகாராணிக்கு காண்பிப்பது குறித்து பெரும் ஆர்வத்துடனிருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலிபோர்னியாவின் மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் அவர்கள் வீடியோ மூலம் குழந்தையை காண்பித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரிதம்பதியினர் குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தைக்கு தாங்கள் தெரிவித்துள்ள பெயர் குறித்து பிரிட்டிஸ் மகாராணியிடம் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள.ன

0/Post a Comment/Comments

Previous Post Next Post