வெளியானது விஜய் பிறந்தநாள் காமன் டிபி! - Yarl Voice வெளியானது விஜய் பிறந்தநாள் காமன் டிபி! - Yarl Voice

வெளியானது விஜய் பிறந்தநாள் காமன் டிபி!விஜய் பிறந்தநாளை இணையத்தில் கொண்டாடும் விதமாக காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தெறிக்க விடுகிறார். பொதுவாக எல்லாருக்கும் ஒவ்வொரு வயதாகும் போதும் முதிர்ச்சி தெறியும். மாறாக, விஜய்க்கோ ஒவ்வொரு பிறந்தநாளிலும் வயது குறைந்து, இளமை கூடுகிறது. இவரின் வயதிலிருக்கும் மற்றவர்களைப் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். அந்தளவுக்கு மோஸ்ட் சார்மிங் ஆக்டராக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

அவரது பிறந்தநாளைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் என விஜய் ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். மறுபுறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் CDP எனப்படும் காமன் டிபி-யை டிசைன் செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்த காமன் டிபி-யை தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்புப் படமாக வைத்து சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளில் எந்த மாதிரியான காமன் டிபி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 

அந்த வகையில் இந்த வருட டிபி-யில் ’மெர்சல்’ வெற்றிமாறனும், ‘பிகில்’ ராயப்பனும் கைகளில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக உள்ளது. சின்ன வயது விஜய் முதல் தளபதி 65 பட விஜய் வரை அவரின் முக்கியமான தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post