கொரோனா தொற்றாளர்களால் யாழ் போதனா விடுதி நிரம்பியுள்ளது - புதிதாக சிகிச்சை கூடம் அமைக்க நடவடிக்கை - பணிப்பாளர் பவானந்தராசா - Yarl Voice கொரோனா தொற்றாளர்களால் யாழ் போதனா விடுதி நிரம்பியுள்ளது - புதிதாக சிகிச்சை கூடம் அமைக்க நடவடிக்கை - பணிப்பாளர் பவானந்தராசா - Yarl Voice

கொரோனா தொற்றாளர்களால் யாழ் போதனா விடுதி நிரம்பியுள்ளது - புதிதாக சிகிச்சை கூடம் அமைக்க நடவடிக்கை - பணிப்பாளர் பவானந்தராசாயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இரு விடுதிகளிலும் நோயாளர்கள் நிரம்பியிருப்பதாக கூறியுள்ள பணிப்பாளர், மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கேட்டிருக்கின்றார். மேலும் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post