பயணத்தடையை மீறி யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிபைப்படுத்தல் - Yarl Voice பயணத்தடையை மீறி யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிபைப்படுத்தல் - Yarl Voice

பயணத்தடையை மீறி யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிபைப்படுத்தல்யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பத்தில்  முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர்  குறித்தபகுதியின் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

தற்போது நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் 

 யாழ்ப்பாண போலீசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post