நெடுந்தீவில் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கும் அதிகாரிகள் -மறுப்போர்க்கு பொலிஸாரை ஏவி அடாத்து- - Yarl Voice நெடுந்தீவில் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கும் அதிகாரிகள் -மறுப்போர்க்கு பொலிஸாரை ஏவி அடாத்து- - Yarl Voice

நெடுந்தீவில் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கும் அதிகாரிகள் -மறுப்போர்க்கு பொலிஸாரை ஏவி அடாத்து-
நெடுந்தீவில் சீவல் தொழிலில் ஈடுபடுபவர்களின் உற்பத்திகளை போத்தல் கள் அடைக்கும் நிலையத்துக்கு 50 ரூபாவுக்கு வழங்க வேண்டுமென அதிகாரிகளால் வற்புறுத்தப்படுவதாக சீவல் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெடுந்தீவில் சீவல் தொழிலில் ஈடுபடுபவர்களின் உற்பத்திகள் கள்ளா ரூபா 100 விற்பனை செய்ய முடிவதோடு மேலதிக உற்பத்திகள் இல்லாத நிலையில் அவர்களின் வயிற்றிலடிக்கும் அதிகாரிகளின் செயற்பாடு குறித்து பல்வேறு தரப்பிலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய இடங்களில் விற்பனைக்கு மேலதிக கள்ளினை உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் போத்தலில் அடைத்து உற்பத்தி குறைந்த காலங்களிலில் விற்பனை செய்யப்படுகின்றன.

கள் குறைந்த பனைதென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் பிற்சங்கங்களிடம் இருந்து கள்ளினை பெற்று அடைக்கின்றன.

ஆனால் நெடுந்தீவில் உற்பத்தியாகும் கள் உடனடியாகவே விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் ஏன் அவற்றை அடிமாட்டு விலைக்கு பொலிஸார் மதுவரித் திணைக்கள அதிகாரிகளை கொண்டு அச்சுறுத்தி வாங்க முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

முறையாக நெடுந்தீவில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினை வழி நடத்தமுடியாத அதிகாரிகள் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதை நிறுத்த முன்வரவேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post