பயணத் தடைக்குள் திருட்டு - யாழில் மூவர் கைதாகினர் - Yarl Voice பயணத் தடைக்குள் திருட்டு - யாழில் மூவர் கைதாகினர் - Yarl Voice

பயணத் தடைக்குள் திருட்டு - யாழில் மூவர் கைதாகினர்பயணத் தடை வேளையில் யாழ்ப்பாண குடாநாட்டின் நகரப்பகுதிகளில் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய மூவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துன்போது குறித்த கடைக்களில் இருந்து தொலைக்காட்சி துவிச்சக்கர வண்டி மற்றும் மின்சாதன பொருட்கள் விலை உயர்ந்த உணவு பொருட்கள் பிஸ்கட் வகைகளை பால் பாக்கெட்டுகள் என 5 திருடப்பட்டதாக கடை உரிமையாளர்களினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்றைய தினம் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் சட்டநடவடிக்கைக்கு ட்படுத்தப்படவுள்ளார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post