அரசியல் கைதிகளையும் அனைவரையும் விரைந்து விடுவியுங்கள் - தமிழ் அரசியல் கைதி ஜெயச்சந்திரன் கோரிக்கை - - Yarl Voice அரசியல் கைதிகளையும் அனைவரையும் விரைந்து விடுவியுங்கள் - தமிழ் அரசியல் கைதி ஜெயச்சந்திரன் கோரிக்கை - - Yarl Voice

அரசியல் கைதிகளையும் அனைவரையும் விரைந்து விடுவியுங்கள் - தமிழ் அரசியல் கைதி ஜெயச்சந்திரன் கோரிக்கை -
எங்களது விடுதலைக்காக  தொடர்ந்து குரல் கொடுத்த மக்களுக்கும்,  செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள் எனத்  தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 
பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட எம்மை போன்ற உறவுகள் சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் மிக விரைவில் விடுவிக்க வேண்டும்..

பலர் செய்யாத குற்றங்களுக்காக நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களையும் சமூகத்துடன் வாழ வைக்க வேண்டும்.“ என கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post