ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது - அனந்தி கேள்வி - Yarl Voice ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது - அனந்தி கேள்வி - Yarl Voice

ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது - அனந்தி கேள்விஅமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால் ஏன் ஜனாதிபதியாலும் பிரதமராலும் விடுவிக்க முடியவில்லையென முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,நீண்ட காலமாக சிறைகளில் இருந்த  அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவொரு மகிழ்ச்சியான விடயமாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று நிலையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டது உண்மையில் மகிழ்ச்சியான விடயமே .இவை தவிர மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் எந்தவித பாரபட்சமும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். சிங்கள முஸ்லீம்கள் கூட ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் இன்றும் பலர் அரசியல் கைதிகளாக உள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post