தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது அவசியம் - யாழில் அமைச்சர் ஜயக்கொடி - Yarl Voice தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது அவசியம் - யாழில் அமைச்சர் ஜயக்கொடி - Yarl Voice

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது அவசியம் - யாழில் அமைச்சர் ஜயக்கொடிதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதென சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

நேற்று ஆரியகுளம் நாகவிகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர்,பொசன் தினத்தை முன்னிட்டு தமிழ்  அரசியல் கைதிகளுக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் கேட்ட போதே  அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  வடக்கிலுள்ள இளைஞர்கள் பலர் சிறைகளில் உள்ளனர். ஆகவே
அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது .பல்லின மக்கள் வாழும் நாட்டில் இதனை மேற்கொள்ளும்போதே இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post