கொரோனா வைரஸ் நீக்க வேண்டி யாழில் விசேட வழிபாடு - Yarl Voice கொரோனா வைரஸ் நீக்க வேண்டி யாழில் விசேட வழிபாடு - Yarl Voice

கொரோனா வைரஸ் நீக்க வேண்டி யாழில் விசேட வழிபாடுகொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி இலங்கையின் எட்டுத்திசையிலும் உள்ள விகாரைகளில் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இரவு 7.11 மணிக்கு 108 தீபங்கள் ஏற்றி பிரித் ஓதி  பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. 

இதனொரு அங்கமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நாக விரையிலும் இவ் வழிபாடுகள் இடம்பெற்றன.

இது வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் உள்ள விகாரைகளில் இந்த வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர்  சிசிர ஜயக்கொடி ,யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ,யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post