கிளிநொச்சியில் கொரோனா தொற்றால் வீடுகளிலேயே தொற்றாளர்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெரியபரந்தன் மற்றும் கண்ணகிநகர் ஆகிய கிராமங்களில் வீட்டில் இறந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியபரந்தன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடை ஆண் ஒருவர் வீட்டில் இறந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை கண்டாவளை கண்ணகிநகர் கிராமத்தில் 67 வயது பெண் வீட்டில் இறந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணமும் வீட்டில் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் சமூகத்துக்குள் கொரோனா பரவிவிட்டதையே இம் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன.
பரிசோதனைகள் அதிகரிக்கப்படாவிடில் மேலும் பல மரணங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகின்றது.
Post a Comment