அபிவிருத்தி என்ற பெயரில் எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது- சாணக்கியன் - Yarl Voice அபிவிருத்தி என்ற பெயரில் எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது- சாணக்கியன் - Yarl Voice

அபிவிருத்தி என்ற பெயரில் எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது- சாணக்கியன்




அபிவிருத்தி என்ற பெயரில் எமது மண்ணின்  வளங்களை சுரண்டுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்

முகநூல் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர்மக்களை நேற்று சந்தித்தேன். 

இதன்போது குறித்த பகுதி மக்களினால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்றும் என்னிடம் கையளிக்கப்பட்டது. 

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகணங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர். 

சுமார் 30 மீனவர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல   பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் ஏதும் கேட்டால் அவர்கள் தங்களை தாக்குவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர். அத்துடன், கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள்,விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே நான் அங்கு சென்று அவர்களுடன் இவ்பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி இருந்தேன். அத்துடன் அரசாங்க அதிபர் மூலமாக இதற்கான தீர்வை பெற்றுத் தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post