அடுத்த சில நாட்களில் பெறப்படும் பிசிஆர் முடிவுகள் ஜூன் 21இல் நாட்டை திறப்பதைத் தீர்மானிக்கும் : பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் - Yarl Voice அடுத்த சில நாட்களில் பெறப்படும் பிசிஆர் முடிவுகள் ஜூன் 21இல் நாட்டை திறப்பதைத் தீர்மானிக்கும் : பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் - Yarl Voice

அடுத்த சில நாட்களில் பெறப்படும் பிசிஆர் முடிவுகள் ஜூன் 21இல் நாட்டை திறப்பதைத் தீர்மானிக்கும் : பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்அடுத்த சில நாட்களில் பெறப்படும் பிசிஆர் சோதனை அறிக்கைகள் ஜூன் 21இல் நாட்டைத் திறக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஊடகவியலாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனிமைப்படுத்தல் தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அடுத்த சில நாட்களில் சீரற்ற பிசிஆர் சோதனை முடிவுகளின் மூலம் நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியும். எனவே பயணக் கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானம் அந்தப் பரிசோதனைகளுக்குப் பிறகே எடுக்கப்படும் என நாம் கூறுகிறோம் எனத் தெரிவித்தார். 

நடைமுறையிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து பிரஜைகளையும் கேட்டுக்கொள்வதோடு தொற்று நோயிலிருந்து  உயிர் வாழத் தேவையான இலக்குகளை அடைய சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பளிக்கும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post