நேருக்கு நேர் மோதவோ அல்லது பேச்சுவார்த்தையோ எதற்கும் நாடு தயார் ! வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன் - Yarl Voice நேருக்கு நேர் மோதவோ அல்லது பேச்சுவார்த்தையோ எதற்கும் நாடு தயார் ! வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன் - Yarl Voice

நேருக்கு நேர் மோதவோ அல்லது பேச்சுவார்த்தையோ எதற்கும் நாடு தயார் ! வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன்நாட்டின் கண்ணியத்தையும்,  சுத்தந்திர செயற்பாடுகளையும் பாதுகாக்க அமெரிக்காவுடன் எதிர்த்து நிற்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ வடகொரியா தயாராக வேண்டும் எனவும் தேவை ஏற்படின்  எதிர்த்து நிற்கவும் தயார் எனவும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக அந்நாட்டு அரச ஊடகமான KCNA இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா அதிபருக்கான நேரடி அறைகூவல்  இது என கருதப்படுகிறது. 

நேற்று ஆளும் கட்சியின் உறுப்பினர்களிடையே விரிவான கொள்கை உரை ஆற்றிய அதிபர் கிம் வாஷின்டோனை  ராஜதந்திர ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவரித்ததாக  அவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கான வடகொரியாவின் தூதுவராக சங் கிம் என்பவரை அதிபர் கிம் ஜோங் உன்  நியமித்துள்ளதாகவும் அவர் விரைவில் தென்கொரியாவுக்கான தனது முதல் பயணத்தை ஆரம்பிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post