சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் சி.ஐ.டி விசாரணை - Yarl Voice சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் சி.ஐ.டி விசாரணை - Yarl Voice

சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் சி.ஐ.டி விசாரணைசிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் விசாரித்தனர்.

தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22 இற்கும்  கூடுதலான வினாக்களைத் தொடுத்தனர். விடைகளைப் பதிந்து சென்றனர்.

சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது.

இதுவரை காலம் சிவசேனை வெளியிட்ட நூல்கள் தட்டிகள் சுவரொட்டிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் காட்டிய மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஒவ்வொரு படியை எடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கொடுத்த போது அவற்றின் படங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி எடுத்துச்செல்ல மறுத்து விட்டனர்.

பசுவதைத் தடைச் சட்டக் கோரிக்கை தொடர்பாக இதுவரை சிவசேனை நடத்திய போராட்டங்கள் யாவற்றையும் விளக்கமாகக் கேட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post