அமைச்சர் உதயகம்பன்பிலவை நீக்கிவிட்டு பசில் ராஜபக்சவை நியமிக்கும் எண்ணம் இல்லை - இராஜாங்க அமைச்சர் - Yarl Voice அமைச்சர் உதயகம்பன்பிலவை நீக்கிவிட்டு பசில் ராஜபக்சவை நியமிக்கும் எண்ணம் இல்லை - இராஜாங்க அமைச்சர் - Yarl Voice

அமைச்சர் உதயகம்பன்பிலவை நீக்கிவிட்டு பசில் ராஜபக்சவை நியமிக்கும் எண்ணம் இல்லை - இராஜாங்க அமைச்சர்
உதயகம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்திற்கு பசில் ராஜபக்சவை நியமிக்கும் எண்ணம் எதுவுமில்லை என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் பசில் ராஜபக்ச இணைந்தால் அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் வலுப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

பசில்ராஜபக்ச அமைச்சரனால் அனைத்து பிரச்சினைகளிற்கும் தீர்வை காணமுடியாது என தெரிவித்துள்ள அவர் பசில் கடந்த காலங்களில் தனது அமைச்சின் ஊடாக பல பணிகளை ஆற்றியுள்ளதால் அவரால் ஜனாதிபதிக்கு உதவமுடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முடிவுகள் நீண்டகலந்துரையாடலின் பின்னர் கூட்டாக எடுக்கப்படுகின்றன,
அரசாங்கத்திற்குள் உள்மோதல் எதுவும் இல்லை, பல தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதிப்பதன் மூலம் ஜனநாயகம் பின்பற்றப்படுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post