ஓகஸ்ட் 1 முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம் - Yarl Voice ஓகஸ்ட் 1 முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம் - Yarl Voice

ஓகஸ்ட் 1 முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் நிபந்தனைகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையான பயணிகளுடன் மாகாண போக்குவரத்து நடவடிக்கைகள் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

மாகாணங்களுக்கிடையே வரையறுக்கப்பட்ட அளவில்  இ.போ.ச. பஸ் மற்றும் தனியார் துறை பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் அலுவலக நேரங்களில் தினமும் காலையும் மாலையும் பஸ் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை மாகாணங்களுக்கிடையே வரையறுக்கப் பட்ட அளவில் ரயில் சேவைகள் ஓகஸ்ட் 1 முதல் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் டெல்டா பிறழ்வு நாட்டில் பரவி வருவதால் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிக அவதானமா இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post