பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் ஒடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது – 45பேர் பலி - Yarl Voice பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் ஒடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது – 45பேர் பலி - Yarl Voice

பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் ஒடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது – 45பேர் பலி
பிலிப்பைன்ஸில் இராணுவம் விழுந்து நொருங்கியதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

90பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவம் விமானம் ஓடுபாதையை விட்டு  விழுந்து நொருங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் காணப்பட்ட படையினருடன் மூன்று பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

பல கட்டிடங்களுக்கு அருகில் காணப்பட்ட சிறிய வனப்பகுதியில் விழுந்து நொருங்கிய விமானத்திலிருந்து படையினரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

விமானம்விழுந்து நொருங்கியவுடன் தீப்பிடித்தது பெரும் புகைமண்டலம்  எழுந்தது.

பலர் காயமடைந்துள்ளனர் ஐவர் காணாமல்போயுள்ளனர் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிவித்துள்ளனர்.

மின்டனாவோவிலிருந்து படையினருடன் வந்துகொண்டிருந்த விமானம் ஜோலோவில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அது ஓடுபாதையை விட்டு விலகியது கட்டுப்பாட்டிற்கு அதனை கொண்டு வரமுயன்றபோதும் அது சாத்தியமாகவில்லை இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

விமானம் நிலத்தில் விழுவதற்கு முன்னர் பல படையினர் அதிலிருந்து குதித்தனர் என இதன் காரணமாக அது வெடித்துச்சிதறுவதற்கு முன்னர் அவர்கள் உயிர் தப்பினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் எவ்வாறு விமானத்திலிருந்து தப்பினார்கள் அவர்களின் நிலை எவ்வாறானதாக காணப்படுகின்றது என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post