பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் - Yarl Voice பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் - Yarl Voice

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உட விடுதலை செய்!, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் - எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் - மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண காவல்துறையினர் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதை அடுத்து போராட்டம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post